40 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் இருவர் கைது!!

597

hashishமன்னார் – சவுத்பார் கடற்பரப்பில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கேரள கஞ்சாவுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11.30 அளவில் மன்னார் பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை சோதனை செய்த போது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் நாளை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.