இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் சுற்றுலா செல்ல வசதி!!

716

chogmபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டுக்கென இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் நாட்டில் வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சு இறங்கியுள்ளது. இலங்கை வரும் சில வெளிநாட்டுத் தலைவர்கள் நாட்டில் வடக்கு உள்ளிட்ட வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல அனுமதி கோரியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.