100வது பிறந்த நாளில் பரசூட்டில் இருந்து குதித்த முதியவர்!!

475

paraஅமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோனியாவை சேர்ந்தவர் வெர்னான் மேனார்டு 100 வயது முதியவர் கார் விற்பனை செய்து வந்தார்.

இவர் பரசூட் வீரரும் ஆவார். சமீபத்தில் இவர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். அதை வித்தியாசமாக கொண்டாடும் படி அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதை தொடர்ந்து அன்று அவர் கலிபோனியாவில் உள்ள பெர்ரிஸ் நகரில் விண்ணில் பறந்த விமானத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பரசூட் மூலம் தரையில் குதித்து சாதனை படைத்தார்.

அவருடன் பயிற்சியாளரும் குதித்து உதவி புரிந்தார். இது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என வெர்னான் மேனார்டு தெரிவித்தார்.