விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

563

Lexi-Hudsonஇங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன்(30).

இவரது மகள் லெக்சி ஹட்சன்(4), மிகப் பெரிய நாயோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் சொக்லேட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டே விளையாடினார் .

இந்நிலையில் அவரது கையில் இருந்த சொக்லேட்டை பறிக்க நாய் பாய்ந்தது. இதனை அறியாத லெக்சி, நாயோடு சண்டையிடவே கோபத்தில் பயங்கரமாக குரைத்தபடி பாய்ந்து கடித்து குதறியது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், பார்த்து அலறி கூச்சல் போட்டனர். விரைந்து வந்த ஹட்சன் குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார்.

உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தார்.