கிரிக்கெட் வீரர் விராத் கோலியுடன் தமன்னா காதல்??

738

tamanaகிரிக்கெட் வீரர் விராத் கோலியும் தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ஹிம்மத்வாலா படம் மூலம் இந்திக்கும் போனார்.

தற்போது தமிழில் வீரம் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற இந்தி படத்திலும் ஏகடு என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

தமன்னாவும் விராத் கோலியும் விளம்பர படமொன்றில் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் நெருக்கம் எற்பட்டது. அடிக்கடி சந்தித்து நட்போடு பழகி வந்தனர். தற்போது அது காதலாக மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.

விராத் கோலி ஏற்கனவே பல பெண்களுடன் இணைத்து பேசப்பட்டவர். இப்போது தமன்னா வலையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது, காதலை அவர் உறுதிபடுத்தவில்லை.