அநுராதபுரத்தில் வங்கிக் கொள்ளை முயற்சி தோல்வி!!

626

bankஅநுராதபுரம் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வங்கியொன்றில் முன்னெடுக்கப்பட்ட கொள்ளை முயற்சி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று அதிகாலை வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் பணம் மற்றும் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான பெட்டியை உடைக்க முடியாது போனதால் கொள்ளையர்கள் தங்கள் முயற்சிகை கைவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் படி சந்தேகநபர்களை தேடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.