தனியார் பேருந்து 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : 10 பேர் படுகாயம்!!

923

ஹட்டன் – களனிவத்தை தோட்டத்திலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று களனிவத்தை ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களனிவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த 10பேரில் 6 சிறுவர்களும், 4 ஆண்களும் தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.