பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் தூக்கில் தொங்கிய சிறுமி!!

1716

Love-facebookபெங்களூரைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவி ஃபேஸ்புக் மூலம் கிடைத்த காதலன் ஏமாற்றியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் ஃபேஸ்புக் மூலம் ஒருவருடன் நட்பானார். குறித்த இளைஞர் ஏலஹன்காவில் உள்ள சோஷாத்ரிபுரம் கல்லூரியில் பி.கொம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தான் ஹொலிவுட் நடிகர்கள் போன்றும், பார்முலா வன் டிரைவர்கள் போன்றும் பைக் ஓட்டுவேன் என்று குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார். இதை நம்பிய சிறுமி அவரிடம் மயங்கிவிட்டார்.

இத்தனைக்கும் சிறுமி வீட்டில் இணைய வசதி இல்லை. வெளியிடங்களுக்கு சென்று அங்கு ஃபேஸ்புக் மூலம் தன் காதலனுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் காதலன் அழைத்ததின்பேரில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு சிறுமி சென்றுள்ளார்.

அங்கு குறித்த இளைஞன் சிறுமியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு சிறுமி அவரது தோழிகளின் விவரம், தொலைபேசி இலக்கங்கள், ஃபேஸ்புக் கணக்கு பற்றி கேட்டு வந்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு சந்தேகம் வந்துள்ளது. இத்தனை விவகாரங்கள் நடந்ததும் சிறுமியின் பெற்றோருக்கு எதுவும் தெரியாது.

இந்நிலையில் சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்க, அவரோ நான் இது எல்லாம் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்று கூறி நழுவிவிட்டார். இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியபோது கதவு உட்புறமாக பூட்டியிருந்தது.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி தூக்கில் பிணமாகத் தொங்கினார். இது குறித்து சிறுமியின் குடும்பத்தார் கூறுகையில், அவர் சில நாட்களாகவே ஒரு மாதிரியாக இருந்தார். நாங்கள் அவர் படிப்பை பற்றி கவலைப்படுகிறார் என்று நினைத்தோம். நேற்று அவர் தனது தம்பியை அதே தெருவில் வசிக்கும் உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு வந்து தற்கொலை செய்துள்ளார் என்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் சிறுமியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாகும் முன்பு சிறுமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

காதலன் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வேதனையாக உள்ளது. நான் சந்தித்து காதலில் விழுந்து 2 மாதங்கள் தான் ஆகின்றன. எல்லாம் நன்றாக சென்றது. நான் அவருக்காக அனைத்தையும் தியாகம் செய்தேன். அவர் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார்.

ஆனால் தற்போது அனைத்தும் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்கிறார். அவர் எப்படி இப்படி செய்யலாம்? என் வாழ்க்கை கெட்டுவிட்டது. எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.