புதுக்குடியிருப்பில் சற்று பதற்றம் : இளைஞர்கள் மீது மோதிய இராணுவ வாகனம்!!

648

புதுக்குடியிருப்பில் இராணுவ வாகனம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி தேவிபுரப்பகுதியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அந்த பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. இரண்டு இளைஞர்கள் பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் எதிரே வந்துகொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று மோட்டர் சைக்கிளுடன், மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.