குழந்தைகளை கவரும் இளவரசர் ஜோர்ஜ்!!

573

george_doll_003இங்கிலாந்தின் இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் கடந்த ஜூலை மாதம் 22ம் திகதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குட்டி இளவரசருக்கு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ம் திகதி தான், பெயர் சூட்டு விழா வெகு விமர்சையாக நடந்தது. அப்போது தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன.

மேலும் இக்குழந்தை அரச பரம்பரையின் 7ம் வாரிசு என்பதால் கிங் ஜோர்ஜ் செவன் என்றும் அழைக்கப்படும். இந்நிலையில் குட்டி இளவரசரை போன்று உருவம் ஒத்த பொம்மையை ஜேர்மனை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.

ஜோர்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மை 48 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.