எதிர்பாராமல் நடந்த விபத்து : சிறுவனின் உயிரை பறித்த கொடூரம்!!(வீடியோ)

507

childபிரித்தானியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லச்செல்லஸ் பார்க் பகுதியை சேர்ந்த சிறுவன் டேனிவேக்(3).

சம்பவதினத்தன்று தனது குடும்பத்தினருடன் ஜொலியாக ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தான். நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் ஒன்று சிறுவனின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து சிசிடிவி கமெரா மூலம் கிடைத்த ஆதாரத்தின்படி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை பொலிஸ் அதிகாரி கூறுகையில் டேனியை இடித்த பிறகும் அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது மிகப்பெரிய குற்றமாகும்.

விபத்து ஏற்பட்டு விட்டது என்ற பதட்டத்தில் கூட இவ்வாறு சென்றிருக்கலாம். சிசிடிவி வீடியோவின் மூலம் குறித்த நபரை தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் அழகாக இருக்கும் டேனியின் இழப்பை தாங்கமுடியாத துக்கத்தில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.