அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண கேக்கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.
மணமக்களின் முக சாயலில் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேசையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் திகிலடைந்து விட்டனர்.
அதோடு கேக்கின் அருகில் மரணம் வரையில் எங்களுக்குள் பிரிவு இல்லை என்ற வாசகத்தையும் எழுதி வைத்தனர் இந்த வித்தியாசமான தம்பதியர். இந்தக் கேக்கில் மற்றொரு விஷேசம் என்னவென்றால் இது மணப்பெண் நதாலேயே கைப்பட தயாரித்தது ஆகும்.
அக்கலையில் வல்லுனரான நதாலே சுமார் 40 மணிநேரம் செலவிட்டு அதை வெண்ணிலா, சொக்லட் சுவையில் பட்டர்கிரீம் கொண்டு தயாரித்துள்ளார்.
மணமக்கள் மற்றும் விருந்தினர்களை இந்த கேக் கவர்ந்தாலும் அவருடைய பாட்டிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். இந்த வித்தியாச கேக் தயாரிக்கும் யோசனை ஏற்பட்டது குறித்து நதாலே கூறும்போது,
கணவர் டேவிட் திகில் சினிமாப்பட பார்ப்பதில் தீவிர இரசிகர். அவரை மகிழ்விக்கவே இதை தயாரித்தோம். இது அனைவரையும் வியக்க வைத்தது உண்மை எனத் தெரிவித்துள்ளார்.