தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டேர்பன் நகரில் சாட்ஸ்வொர்த் பகுதியில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த சிறுமி சாடியா சுக்ராஜ்(வயது 9), நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது தந்தையுடன் சாடியா காரில் சென்று கொண்டிருந்த போது, துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் காரை வழிமறித்து சண்டையிட்டுள்ளனர்.
காரை அபகரிக்கும் முயற்சி தோற்றுப் போனதுடன், பொதுமக்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இதற்கிடையே அவர்கள் காரில் தப்பிச் செல்ல முயலவே, விபத்தில் சிக்கியுள்ளது. அப்போது கடத்தல்காரர்களில் ஒருவரை பொலிசார் மடக்கி பிடித்தனர், ஒருவர் இறந்து கிடக்க மற்றொருவர் துப்பாக்கியால் சுட சாடியா மீது குண்டு பாய்ந்தது.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக பலியானார். இதனை தொடர்ந்து சாட்ஸ்வொர்த் பொலிஸ் நிலையம் முன் ஆயிரக்கணக்கானர் போராட்டத்தில் ஈடுபட்டனர், பொலிசாரும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதாக பெரும் பரபரப்பு நிலவியது.





