முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் அமரர் நடராஜா ரவிராஜின் 7வது நினைவு தின நிகழ்வுகள் நாளை உணர்வு பூர்வமாக யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வானது சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள ஐங்கரன் மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சிறப்புரை ஆற்றவுள்ளதோடு, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் நினைவுரை நிகழ்த்தவுள்ளார்.
மாமனிதர் ரவிராஜ் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி பட்டப்பகல் வேளையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து துப்பாக்கிதாரிகளால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.





