விளையாட்டு விபரீதமானதில் 50 நாட்களுக்கு பின் பரிதாபமாக உயிரிழந்த நபர்!!

693

காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் சறுக்குமரம் ஏறிய போது சறுக்கி விழுந்த இளைஞரொருவர் 50 நாட்களின் பின் உயிரிழந்துள்ளார். காரைதீவை சேர்ந்த 41 வயதுடைய சாமித்தம்பி தவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சித்திரை வருட விளையாட்டு விழா காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றபோது வழமையாக சறுக்குமரம் ஏறும் அவர் இம்முறையும் ஏறியிருந்தார்.

சறுக்கு மரத்தில் ஏறி மரத்தில் கட்டியிருந்த கயிற்றை எட்டிப்பிடிக்க முயற்சித்த போது பிடி தவறி தரையில் விழுந்துள்ளார்.



சம்பவத்தில் எலும்புகள் முறிந்த நிலையிலும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் உடனே கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சுமார் 48 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். எனினும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு 2 தினங்களில் (மே 31) குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.