ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா விலகிய நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கியுள்ள நிலையில் தனது முதல் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது. இப்போட்டி வரும் 14-ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் சாஹாவுக்கு விரலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து தினேஷ் கார்த்திக் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக் ஆப்கானிஸ்தான் தொடரிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது