10 வயதுச் சிறுமியை முச்சக்கர வண்டியிலிருந்து தள்ளிவிட்ட இளைஞர்கள்!!

549

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சென்று தள்ளி விட்ட இரு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சந்தேகநபர்களை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று உத்தரவிட்டார்.

ஆத்திமோட்டை, எட்டாம் வட்டாரம், நிலாவெளி, பகுதியைச் சேர்ந்த 20, மற்றும் 21 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு சென்ற வேளையில் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று தள்ளி விட்டுள்ளதாக சந்தேகநபர்களுக்கெதிராக சிறுமியின் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேகநபர்கள் 1ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.