தமிழ்நாட்டில் நிறைவேறிய வெளிநாட்டு தம்பதியரின் கனவு!!

715

weddingதமிழக கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட பிரான்ஸ் மருத்துவருக்கும், இத்தாலியை சேர்ந்த ஆசிரியைக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.

இத்தாலி நாட்டை சேர்ந்த ஆசிரியை பாஸ்கால் ஹிட்டோ.
இவர் இத்தாலிக்கு சென்ற போது மருத்துவர் ஆலன் ஹிட்டோவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

ஏற்கனவே விவாகரத்து பெற்ற இவர்கள் தமிழக கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்கள் விருப்பத்தைப் பிரான்சில் வசிக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த போஸ்கோ குணசீலன் என்பவரிடம் தெரிவித்தனர்.

பின்னர் குணசீலனின் சொந்த ஊருக்கு வந்த தம்பதியினர், அங்குள்ள புனித அந்தோனியார் மேரி மாதா வளாகத்தில் வைத்து தமிழக கத்தோலிக்க முறைப்படி நெல்லை மாவட்ட ஆயர் ஜீடு பால் ராஜ் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மோனிக் கபிர்மேல், கத்தோலிக்க சபையினர் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தினர்.