அஜித்தின் வீரம் படம் டிரெய்லர் வெளியானது : ரசிகர்கள் வரவேற்பு!!

563

veeramஆரம்பம் படத்துக்கு பின் அஜித் வீரம் படத்தில் நடிக்கிறார். இதில் நாயகி தமன்னா. காமெடி வேடத்தில் சந்தானம் வருகிறார். சிவா இயக்குகிறார். இதில் அஜித் வேட்டி, சட்டையில் நடிக்கிறார். கிராமத்து கதையம்சத்தில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தின் முதல் டிரெய்லர் நேற்று தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் வெளியானது. வில்லன்கள் கொலை வெறியோடு ஓடுவது போன்றும் அஜித் பார்ப்பது போன்றும் இந்த டிரெய்லர் இருந்தது. டிரெய்லர் தங்களை மிகவும் கவர்ந்ததாக அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர்.