இரண்டு மனித கடத்தல்காரர்களுடன் 5 சட்டவிரோத குடியேறிகள் வடக்கு கடற்பரப்பில் கைது!!

694

சட்டவிரோத குடியேறிகள் ஐவருடன், இரண்டு மனித கடத்தல்காரர்களை வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறையிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் வைத்து நேற்று காலை அவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்துள்ளது. இரண்டு கடத்தல்காரர்களுடன் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களுடன் சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக டிங்கி படகின் ஊடாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் பயணித்த டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட டிங்கி படகுடன் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.