நடிகை அஞ்சலி தொடரும் சர்ச்சைகளால் தவிக்கிறார். நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதால் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழ் நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார்.
சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் கொடுமைபடுத்தியதாக பரபரப்பு பேட்டியும் அளித்தார். அஞ்சலி கடத்தப்பட்டதாக வழக்கு பதிவானது. இதையடுத்து ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். சென்னைக்கு வரமாட்டேன். தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறார்.
ஐதராபாத்திலேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சலிக்கு எதிரான வழக்குகள் தற்போது விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளன. இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை, நீதிமன்றத்தில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சித்தி பாரதிதேவி அஞ்சலி மாதம் தோறும் 50 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அஞ்சலி கடைசியாக தமிழில் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இந்த படம் முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. படத்தின் இயக்குனர் களஞ்சியம் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கங்களில் அஞ்சலி மீது புகார் அளித்துள்ளார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அஞ்சலிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது அவரை வேதனை படுத்தி உள்ளது. கைதாவதை தவிர்க்க நீதிமன்றத்தில் சரண் அடையலாமா என்று வக்கீல்களிடம் ஆலோசிக்கிறார்.
ஊர் சுற்று புராணம் படம் பிரச்சினையில் அஞ்சலி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து திரையுலகத்தினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.





