வட மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!!

452

NPC-1வடக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நாளை திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு சபை முதல்வர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் சம்பிரதாய பூர்வமாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சபை முதல்வர் உரையாற்றுவதற்காக அழைத்ததற்கமைய வட மாகாண சபையின் ஆளுநர் உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரையும், சபை முதல்வர் சிவஞானம் அவர்களின் உரையும் இடம்பெற்று தேநீர் இடைவேளை விடப்படும். அதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளன.

கடந்த அமர்வில் சபையின் உறுப்பினர்களில் 17 பேர் உரையாற்றியுள்ள நிலையில், ஏனைய அங்கத்தவர்கள் நாளை நடைபெறவுள்ள இரண்டாம் அமர்வில் தமது கன்னி உரைகளை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.