வவுனியா மாணவன் தேசிய ரீதியில் கைப்பணி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

594

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கைப்பணிப் போட்டியில் மிருதங்கம் ஒன்றை தயாரித்து முதலாம் நிலையினை பெற்ற வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06.06) இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் உதயசூரியன் துவாகரன் என்ற மாணவன் கடந்த 28.05.2018 அன்று பண்டாராநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மாணவனின் கைப்பணி திறமையை பாராட்டி ஜனாதிபதியினால் சான்றிதழும் பணப்பரிசிலும் (25 ஆயிரம் ரூபா) வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்னன் கலந்துகொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

நிகழ்வில் பிரதி அதிபர் எஸ்.ஜெரோம் பிரதாபன், உப அதிபர்களான ரி.மோகன், கே.தர்மரட்ணம் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.