வவுனியாவில் இடம்பெற்ற இதயத் தாகம் நூல் வெளியீடு விழா!!(படங்கள்)

335

வவுனியா முத்தையா மண்டபத்தில் கடந்த சனிகிழமை திருமதி மேரி மெக்டலீன் ஜெக்கெனடி அவர்களின் இதயத் தாகம் கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

தமிழர் வரலாறுகளும் தமிழ் படைப்புக்களும் அருகி வரும் சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதர்களின் உள்ளக் கிடைக்களிலும் உள்ள எதிர்பார்ப்பு, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய ஆசிரியை திருமதி மேரி மெக்டலீன் ஜெக்கெனடி அவர்களால் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பல கவிதைகளை எழுதிய போதும் அவை நூல் வடிவில் வெளிவரவில்லை. அந்த வகையில் ஆசிரியரின் கன்னி முயற்சியே இதுவாகும். இன்று எமது சமூகத்தில் பெண் படைப்பாளிகள் உருவாகுவது குறைவு.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக மேலும் பல மேரி மெக்டலீன்கள் உருவாக வேண்டும் என அங்கு உரை நிகழ்த்திய பலரும் தெரிவித்திருந்தனர்.

நூலினை வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா வெளிட்டு வைக்க உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.கந்தையா பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, வவுனியா தெற்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் கி.உதயகுமார், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் சு.அமிர்தலிங்கம், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.அமல்ராஜ் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

01

1

2