பிரபல நடிகை நக்மாவின் பதவி பறிப்பு!!

585

தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நடிகை நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதன் பின்னணி காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா, கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி தரப்பட்டது.

இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸில் கோஷ்டி பூசல் காரணமாக நக்மாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்தன.

இதனால் அவரிடமிருந்து சமீபத்தில் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நக்மாவின் பதவி பறிக்கப்பறிப்புக்கான காரணம் குறித்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கட்சியின் சீனியர்களை அவர் மதிக்கவில்லை. அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்.

நடிகை குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் இடையே சீனியர் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. நக்மாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

இது போன்ற பல தவறான விடயங்களை அவர் செய்ததால் இது குறித்து கட்சி மேலிடத்திக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்தே அவர் பதவி பறிக்கப்பட்டது என கூறியுள்ளனர்.