செருப்பை தூக்கி எறிந்த நாயகி : படாத இடத்தில் பட்டு துடித்த நாயகன்!!

530

filmஆர்.ராஜ்குமார் படப்பிடிப்பின்போது நாயகி சோனாக்ஷி சின்ஹா தூக்கி எறிந்த செருப்பு நயாகன் ஷாஹித் கபூருக்கு முக்கியமான இடத்தில் பட்டு துடித்துவிட்டாராம்.

ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ஆர்.ராஜ்குமார். பிரபுதேவா இயக்கியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ஒரு பாடலில் சோனாக்ஷி ஷாஹித் மீது செருப்பை தூக்கி எறிந்து விட்டு அமைதி என்று கூற வேண்டும்.

இயக்குனர் கூறியது போன்று சோனாக்ஷியும் செருப்பை தூக்கி எறிந்தார். ஆனால் செருப்பு ஷாஹிதுக்கு படாத இடத்தில் பட்டுவிட்டது. இதையடுத்து ஷாஹித் வலியால் துடித்த போதிலும் சத்தம் போடவில்லை.

சோனாக்ஷி அமைதி என்று சொல்லாமலேயே ஷாஹித் அமைதியாகிவிட்டார். இதற்கிடையே ஷாஹிதுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பிரபுதேவா தெரிவித்துள்ளார்.