மலையாள நடிகை மேகா மேத்யூ, கார் கவிந்த விபத்தில் படுகாயமடைந்து கவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கொச்சியில் இருந்து நேற்று முன் தினம் காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக காரில் கோட்டயம் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது மழை பெய்து கெண்டிருந்தது.
எர்ணாகுளம் அருகே முளன்துருத்தி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் மீது இவர் கார் மீது வேகமாக மோதியது. இதில் மேகாவின் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த மேகா, காருக்குள் மயங்கிவிட்டார்.
மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. காருக்குள் சிக்கியவர் இறந்திருக்கலாம் என்று கருதி யாரும் உதவிக்கு வரவில்லை. காருக்குள் சிக்கிக்கொண்ட மேத்யூ சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.
அப்போது அங்கு வந்த புகைப்படக்காரர் ஒருவர், அந்தப் பகுதியினருடன் சேர்ந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். காயமடைந் திருந்த மேகா மேத்யூவிற்கு கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேத்யூவுக்கு ஏற்பட்ட காயம் சிறியதுதான் என்றாலும் விபத்து பெரியது. காரில் இருந்த் ஏர்பேக் அவரை காப்பாற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.






