அந்த வீடியோவால் கொன்றேன் : மனைவியை கொன்ற கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

573

இந்தியாவில் மனைவியை கொலை செய்த கணவர் பொலிசில் சரணடைந்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் பசூதேவ்பூரை சேர்ந்தவர் பிரபுல்லா பரிக். இவர் மனைவி ஜெயந்தி (28). சமீபகாலமாக ஜெயந்திக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக பரிக்குக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜெயந்தியுடன் ஏற்பட்ட தகராறில் கோடாரியால் அடித்து அவரை பரிக் கொலை செய்துள்ளார். பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்.

பொலிசாரிடம் பரிக் அளித்துள்ள வாக்குமூலத்தில், திருமணமான நபருடன் ஜெயந்திக்கு கள்ளத்தொடர்பு இருந்தது.

குறித்த நபருடன் என் மனைவி ஆபாச நிலையில் இருக்கும் வீடியோவை அவர் செல்போனில் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

மனைவி எனக்கு செய்த துரோகம் தாங்காமல் ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெயந்தியிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்திய நிலையிலேயே அவரை பரிக் கொலை செய்துள்ளதாக ஜெயந்தி குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.