டெல்லியில் 2வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்!!

555

Earthquakeதலைநகர் டெல்லியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பின்னிரவு 12.41 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 புள்ளிகளாக பதிவானது.

இந்நிலையில் தொடர்ந்து 2 வது முறையாக சரியாக ஒருமணி நேரம் கழித்து பின்னிரவு 1.41 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

மிதமான இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.