பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் புயல் தாக்கியதால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு உதவுவதற்காக வாடிகன் தனது முதல் பங்களிப்பாக 1.5 லட்சம் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மூலம் இந்த தொகை விநியோகம் செய்யப்படும் என்றும், இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த பணம் உதவும் என்றும் வாடிகன் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக பிலிப்பைன்ஸ் மக்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் தலைமையில் சுமார் 60 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.