வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!(காணொளி)

1598

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று  (16.06.2018) சனிக்கிழமை நடைபெற்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை 2.30 மணியளவில் வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் சிறப்பு நிகழ்வாக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஜித்தின் ராஜ் (ஓமேல ஒரு கண்ணு பாடல் புகழ் ), சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜேர்சன் , கலக்கப்போவது யாரு புகழ் தகௌபீக், இவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னணி இசைக்குழுவான பிரசாத்தின் ஸ்ருதிலயா இசைக்குழு வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது.


தொடர்ச்சியாக ஐந்து  ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறையும்  நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான FULL HD தரத்துடன் பகல்  மற்றும் இரவு நேர நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .