இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது போட்டி இன்று!!

479

SLஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இன்று மாலை 2.30 மணியளவில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.