ஹம்பாந்தோட்டையில் சிக்கிய பாரிய உயிரினம்!!

1076

ஹம்பாந்தோட்ட, மிரிஜ்ஜவில கடலில் இருந்து 14 அடி நீளமான முதலை ஒன்று சிக்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அதிகாரிகள் குறித்த முதலை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

நான்கரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் முதலையை குறித்த அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவல்களுக்கமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட முதலை புந்தல வனவிலங்கு பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளது.