10 வயதில் கூட்டுப்பாலியல் துஸ்பிரயோகம் : 16 வருடங்களுக்குப் பின் கிடைத்த நீதி!!

727

புத்தளம் பிரதேசத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு 10 வருடங்களுக்குப் பின் நேற்று நீதி கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் நேற்று தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000 ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி 10 வயதுடைய சிறுமி ஒருவரை இரு நபர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 16 வருடங்களுக்குப்பின் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.