இவரின் உடலில் இருப்பது ஓவியம் என்றால் நம்ப முடிகின்றதா? பிரமிக்க வைக்கும் உடல் ஓவிய பெண் கலைஞர்!!

1135

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜினா ரைலாண்ட் எனும் பெண், தனது உடலில் தானே ஓவியங்களை தீட்டி பிரமிக்க வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர் ஜார்ஜினா ரைலாண்ட். இவர் ஒப்பனைக் கலை மட்டுமின்றி, சிறந்த ஓவியக் கலைஞராகவும் விளங்கி வருகிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், மற்ற கலைஞர்கள் எல்லாம் அடுத்தவர்களின் உடலில் தான் ஓவியங்களை தீட்டுவார்கள். ஆனால், ஜார்ஜினா தனது உடலில் தானே ஓவியங்களை தீட்டுகிறார்.

இவர் செய்யும் விடயம் அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில், கண்ணாடியை பார்த்து ஓவியம் தீட்டுவது மிகவும் கடினமாகும். எனினும், ஜார்ஜினா ஒரு தாளில் ஓவியம் தீட்டுவது போல மிக அழகாகவும், நேர்த்தியாகவும் தனது உடலில் தானே ஓவியம் வரைகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இவர், இன்று வரை தனது ஓவியத் திறமையை மெருகேற்றிக்கொண்டே வருகிறார். இதன்மூலம், உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளார்.

ஜார்ஜினா தனது ஓவியக் கலை குறித்து கூறுகையில், ‘ஒரே நாளில் இந்தக் கலை என் வசமாகிடவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவாகவே இன்று மற்றவர்களிடமிருந்து என்னை தனித்துக் காட்டியிருக்கிறது.

இப்போதும் வாரத்தில் ஒரு நாளாவது பயிற்சி செய்யாமல் இருப்பதில்லை. Fashion இதழ்கள், மொடலிங் வாய்ப்புகள் எல்லாம் இந்தக் கலை மூலம் தான் எனக்கு சாத்தியமாயின’ என தெரிவித்துள்ளார்.