யாழில் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!!

500

யாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் – காட்டுபுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.