யாழ். சுழிபுரம் பகுதியில் பாடசாலை சிறுமி ஒருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வரை விசாரணைகளுக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து தரம் ஒன்றில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த பகுதியினை சேர்ந்த சிவனேஸ்வரன் ரெஜினா என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலை விட்டு வீடு திரும்பிய மாணவியை காணாத நிலையில், தேடிய போது அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றது. அத்துடன், சிறுமி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.