தமிழகத்தில் விஷம் குடித்ததால் உயிருக்கு போராடிய பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, காவலாளி ஒருவர் குளுக்கோஸ் இணைப்பை மாற்றிய அவலம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், விஷம் குடித்த பெண்ணோருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சமயத்தில் மருத்துவரோ, செவிலியரோ அல்லாமல் மருத்துவமனையின் காவலாளி குறித்த பெண்ணுக்கு குளுக்கோஸ் இணைப்பை மாற்றியுள்ளார்.
இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, காவலாளி ஒருவர் குளுக்கோஸ் இணைப்பை மாற்றியது தொடர்பாக மருத்துவத்துறை இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஏற்கனவே இந்த மருத்துவமனையின் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில், இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





