பக்கெட் பால் குடித்த குழந்தை சிறிது நேரத்திலேயே மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!

646

சென்னையில் பாக்கெட் பால் குடித்த 2 வயது குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிஷோர் – சித்ரா தம்பதியினரின் 2 வயது குழந்தை கனிஷ்காவுக்கு நேற்று காலை பாக்கெட் பாலை வாங்கி கொடுத்துள்ளார்.

குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை கனிஷ்கா தூங்கியது. அடுத்த சில நொடிகளில் குழந்தை திடீரென அலறியபடி மயங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த சித்ரா குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் இதய துடிப்பு குறைவாக உள்ளது. உடனே குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றனர்.

அதன்படி சித்ரா தனது குழந்தையை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை கேட்டு தனது குழந்தையை கட்டிப்பிடித்து கதறியுள்ளார்.

குழந்தை பாக்கெட் பாலை மட்டுமே அருந்தியது, வேறு எதையும் அருந்தவில்லை. எனவே குழந்தை இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என சித்ரா பொலிசில் புகார் கூறியிருந்தார்.

அதன்படி வேப்பேரி பொலிசார் வழக்கு பதிவு செய்து பால் குடித்ததால் புரை ஏறி குழந்தை இறந்ததா? அல்லது குழந்தை குடித்தது கலப்பட பாலா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.