சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிக சப்தம் எழுப்பியபடி வந்த பிரபல நடிகரின் வாகனத்தை பொலிஸார் மடக்கினர்.
அதன் பின் அவரே அதிக ஒலி எழுப்பும் வாகனத்தை உபயோகிக்காதீர்கள் என்று அறிவுரை செய்த வீடியோ இப்போது பரவலாக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் நேற்றிரவு நடிகர் ஜெய் தனது டிரைவருடன் சென்றிருக்கிறார். அப்போது அதிக சப்தம் எழுப்பியதற்காக அவரது கார் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
உங்கள் வாகனத்திலிருந்து அதிக சப்தம் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து மன்னிப்பு கேட்ட நடிகர் ஜெய் உடனே அது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றிலும் பேசினார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
அதன் படி ” இது என்னுடைய கார் என்று கூறும் ஜெய் , இது போன்று சப்தம் வரும்படி உங்கள் வாகனம் இருந்தால் அதனை மாற்றி கொள்ளுங்கள் காரணம் இது போன்று சப்தத்துடன் உங்கள் வாகனம் இருந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் ஜெய் குடித்து விட்டு வண்டி ஒட்டிய காரணத்திற்காக அவரது லைசென்ஸ் ஆறு மாதங்களுக்கு முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






