உலக அளவில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகைகளின் முகங்கள் வரையப்பட்ட கேரள தனியார் பேருந்து ஒன்றின் புகைப்படம் இணையவாசிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
கேரள மாநிலத்தின் வர்க்கல நகரில் தனியாரால் இயக்கப்படும் ஒருசில பேருந்துகளில் இளைஞர்களை கவரும் நோக்கில் உலக அளவில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகர்களான Mia Khalifa, Johnny Sins, Jordi El Nini, Kortney Kane மற்றும் Sunny Leone ஆகியோரது புகைப்படங்களை ஓவியமாக தீட்டியுள்ளனர்.
இதற்கு அப்பகுதி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக குறித்த தனியார் பேருந்து நிறுவனர் ஷெரின் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் பொதுவாக சன்னி லியோன் புகைப்படத்தை பதாகையாக வடிவமைத்து பேருந்தின் பின்னால் இணைப்பதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.
இதனையடுத்தே ஆபாசப்பட நடிகர்களின் புகைப்படங்களை பேருந்தின் வெளிப்புறம் முழுவதும் ஓவியமாக வரையும் திட்டத்தை செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓவியங்களை வரைய மொத்தம் 20 நாட்கள் ஆனது எனவும் சுமார் 2.6 லட்சம் செலவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த பேருந்தின் புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பிரபல ஆபாசப்பட நடிகர் Johnny Sins தமது டுவிட்டர் பக்கத்திலும் இதை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.