தமிழ்நாட்டில் இளைஞரை அவரின் நான்கு நண்பர்கள் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவரி ஆற்றாங்கரை காட்டு பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிசார் ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர்.
இது தொடர்பாக விமல் என்பவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தீயில் கருகி இறந்துகிடந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சதிஷ் என்பதும் அவரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றிக் கொன்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
சம்பவத்தன்று விமல் கொசவம்பட்டியை சேர்ந்த வசந்த், ராஜேஷ்குமார், சிவசங்கரன் மற்றும் கொலைசெய்யப்பட்ட சதிஷ் ஆகியோரோடு மது அருந்தியிருக்கிறார்.
பிறகு மது போதையில் அருகிலுள்ள ஆற்றங்கரையில் இருட்டிய நேரம் என்பதால் உடையின்றி குளிக்கத்தொடங்கினர்.
அப்போது சதீஷ் தனது மொபைலில் சக நண்பர்கள் ஆடையின்றி குளிப்பதை புகைப்படம் எடுத்து வாட்ஸாப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்ட சக நண்பர்கள் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுதோடு அவரை தாக்கியுள்ளனர்.
பின்னர் ஆத்திரத்தில் சதீஷை கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.