வெளிநாட்டில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக பலி!!

535

தமிழகம், மானாமதுரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை – மூங்கில் ஊரணியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் ஐம்பது வயதான நல்லையா பிரகாஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பனிக்கனேந்தலில் இருந்து சைக்கிளில் முகாமிற்கு திரும்பிய இவர், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.