கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

679

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துரிதமான வேலைத்திட்டத்தினால் மிக விரைவாக அடையாள அட்டைகளை வழங்க கூடியதாக இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய அறிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 12 என்றும் தற்போது இந்த மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மூன்று பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.