இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனம் விற்பனை செய்த ஐஸ்கிரீம்களில் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது மக்களை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரபல நிறுவனம் சொக்லெட் உள்பட பல சுவைகளில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்நிலையில் சொக்லெட் மற்றும் நட்ஸ் ஐஸ்கிரீம் உள்ள 2 கோன்களில் வலி நிவாரண மாத்திரை கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட 2 வகை ஐஸ்கிரீமை திரும்ப பெற முடிவு செய்து ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டது.
வாடிக்கையாளர்கள் தங்கள் கைவசம் இருக்கும் ஐஸ்கிரீமை சாப்பிட வேண்டாம். அதனை அருகில் உள்ள கடைகளில் கொடுத்து அதற்குரிய பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இதுகுறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை இதனால் யாருக்கும் ஏதும் உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும் இதுகுறித்து ஏற்கனவே அதனை விநியோகித்தவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.