லிபியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு, 40 பேர் பலி!!

474

Libiyaலிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்ட பின்னர் பலவீனமான அரசாங்கம் தான் ஆட்சியை கவனித்து வருகிறது.

கடாபியின் ஆதரவாளர்களான போராளிகளின் ஆதிக்கம் பல பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்களின் மீது அடக்கு முறையை ஏவி வரும் போராளிகள், பொதுமக்களின் சொத்துகளையும் சூறையாடி செல்கின்றனர்.

போராளிகளின் அட்டூழியத்துக்கு எதிராக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைநகர் திரிபோலியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் வந்த போராளிகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.