பிரித்தானியாவில் சிங்களவரின் “யாழ் கபே” மீது தாக்குதல் : தமிழ் இளைஞர்கள் மீது பொலிஸார் சந்தேகம்!!

593

shopபிரித்தானியாவின் போல்சில் வீதியில் அமைந்துள்ள சிங்களவர் ஒருவரின் உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “யாழ் கபே” என்ற பெயரில் இந்த உணவகம் நடத்தப்பட்டு வந்தது.

ஸ்ரீசாந்த பெர்ணான்டோ என்ற இலங்கையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த உணவகத்தை ஆரம்பித்துள்ளார்.

எனினும் தாம் ஒரு சிங்களவர் என்ற அடிப்படையில் தமிழ் உணவுகளை தயாரிப்பதை சிலர் விரும்பவில்லை. ஏற்கனவே நேரடியாக வந்து தம்மை சிலர் அச்சுறுத்தியதாகவும் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் உணவத்தில் சில வாடிக்கையாளர்கள் இருந்தபோது அங்கு வந்த சுமார் 20 பேர் வரை ஜன்னல்களை உடைத்துள்ளனர்.

இதன் காரணமாக தமக்கு சுமார் 2000 பவுண்ட்ஸ் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.