வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவரைக் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (16.09) அதிகாலை 4 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த புகையிரதத்தில் 19 கிலோ 265 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஒருவரையே கைது செய்துள்ளதாகவும்,
கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு கஞ்சாவினை எடுத்து வந்ததாகவும் பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்தாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.








