வவுனியா மாணவி தேசிய ரீதியில் கராத்தே போட்டியில் சாதனை : சாதனை கெளரவிப்பு!!

692

தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கத்தை வென்ற இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ம.மோக்சிதாவை வயது (07) கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நேற்று மாலை (02.10) மாலை வவுனியா வாடி வீட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பண்டாரகமவில் தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் (15.09.2018) கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்திருந்தார். அதனை பாராட்டி கௌரவிக்கும் முகமாக வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகளினால் மதிதரன் மொக்சிதாவிற்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ம.மொக்சிதாவிற்கு கராத்தே பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளர் ஜெஸ்லி மார்சல் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ட்டிருந்தார்.

தேசிய ரீதியில் கராத்தே போட்டியில் பதக்கத்தை வென்ற மதிதரன் மோக்சிதாவிற்கு வாழ்த்தி பாராட்டு கவிதை ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகள் மதிதரன் மொக்சிதாவை பாராட்டி வாழ்த்துரைத்தனர்.