குடும்ப தகராறில் பெற்றோர் உட்பட 7 பேரை குத்திக் கொன்றவர் கைது!!

486

knifசீனாவின் ஹெனான் மாகாணம் ஷுவாங்ஜாங் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தில் உள்ள ஏழு பேரை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார்.

குவோ என்றழைக்கப்படும் அவருக்கு குடும்பத்தாருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. சாதாரணமாக தொடங்கிய வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டியதால் அவன் மிகுந்த ஆத்திரம் அடைந்தான்.

வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை, தாய், மனைவி, தங்கை, மகன், மகள் மற்றும் தங்கையின் மகன் ஆகிய ஏழுவரை சரமாரியாக குத்தினான். வெறித்தனமான இந்த தாக்குதலில் ஏழுபேரும் ஒரே வீட்டில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த காட்சி பார்ப்போரை பதற வைத்தது.

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் குவோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.